அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரின் உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘மகாராஷ்டிராவுக்குள் உதயநிதி நுழைய முடியாது’ – மங்கள் பிரபாத் லோதா

உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரை மகாராஷ்டிராவுக்குள் அனுமதிக்க மாட்டோம் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்தி விட்டார் இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல – மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா

சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார் – பெயர் பரமஹன்ஸ ஆச்சார்யா – என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்

10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கலைஞர் அவர்களின் தலையை சீவினால் 1 கோடி என்று விலை வைத்தார். நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கலைஞர் அவர்கள் கேட்டார்கள். ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் […]

இந்து மக்களை மதம் மாற்றும் முயற்சியே சனாதன ஒழிப்பு! – வானதி சீனிவாசன்

சிறுபான்மையினரின் வாக்குக்காகவும், இந்து மதத்திலிருந்து மக்களை சிறுபான்மை மதத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சியினுடைய ஒரு பகுதியாகவும் உதயநிதியின் பேச்சு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் திராவிடம் இந்து மதத்திற்கு எதிரானது என்ற பாஜவின் குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலின் உறுதிபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். சனாதானம் பெண்களுக்கு எதிரானது என்றால் மற்ற மதங்களில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது வீட்டில் உள்ள பூஜை அறையை கூட உதயநிதியால் ஒழிக்கமுடியவில்லை என்று குறிப்பிட்டு […]

சாதியை வைத்துக்கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர், அதற்கு சட்ட போராட்டம் நடத்தினோம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கப்படது, அதையும் மீறி உரிமை பெற்று தந்தோம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அன்று கூறியதை விட, இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன். நான் பேசியது யூடியூபில் உள்ளது, எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியே திமுக. மதத்திற்கு எதிராக நான் பேசவில்லை, மதத்தின் உள் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தான் பேசினேன்.

பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பாக ரக்ஷாபந்தனை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் புனித ராக்கி கயிறு

பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பாக ரக்ஷாபந்தனை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு புனித ராக்கி கயிறு அணிவிக்கப்பட்டது. திருச்சியை சேர்ந்த சகோதரி தேவகி அவருக்கு ராக்கி கயிறு அணிவித்த போது எடுத்த படம்.

திமுக என்பது கரையான் மாதிரி தமிழகத்தை கரையான் பிடித்து இருக்கிறது அதிமுகவைப் பற்றி பேசும் உதயநிதி ஒரு கத்துக்குட்டி

ஸ்டாலினுக்கு பிறகு திமுக தமிழகத்தில் இருக்காது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கட்சிகளுக்குச் சென்ற மருது அழுகறராஜ் அதிமுக பொதுச்செயலாளர் பற்றி பேச அருகதை இல்லை அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார் இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக […]

குரோம்பேட்டையில் செல்வசேகர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி ……

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்து கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வசேகர் நேற்று உயிரை மாய்த்து கொண்ட செய்தி அறிந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர்‌ கோப்பை – 2023

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ (25.07.2023) சென்னை, ஜவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டரங்கத்தில்‌ நடைபெற்ற “முதலமைச்சர்‌ கோப்பை -2023” மாநில அளவிலான போட்டிகள்‌ நிறைவு விழாவில்‌, அதிக பதக்கங்களை வென்று பதக்கப்‌ பட்டியலில்‌ இரண்டாம்‌ இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு பரிசுக்‌ கோப்பையை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஏ.ஆர்‌.ராகுல்நாத்‌, மாவட்ட விளையாட்டு அலுவலர்‌, விளையாட்டு வீரர் ‌-வீராங்கனைகள்‌ ஆகியோரிடம்‌ வழங்கி பாராட்டினார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை […]