தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ சந்தித்து, சென்னையில்‌ நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டு போட்டிகள்‌ 2023 நிறைவு விழாவில்‌ ஒட்டுமொத்த தொடரில்‌ இரண்டாமிடம்‌ பிடித்த தமிழ்நாடு அணிக்கு வழங்கப்பட்ட கோப்பையை காண்பித்து வாழ்த்துப்‌ பெற்றார்

இந்நிகழ்வின்போது, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தலைமையில்‌ பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ சென்னை புறநகர்‌ பகுதிகளில்‌ வீட்டு மனைப்‌ பட்டா வழங்குவது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது

இக்கூட்டத்தில்‌ வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. ராமச்சந்திரன்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புர வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌, அரசு செயலாளர்கள்‌, உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

தலைமைச்‌ செயலகத்தில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தலைமையில்‌ கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டுப்‌ – 2023 போட்டியை சிறப்பாக நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆலோசனை கூட்டம்‌ நடைபெற்றது

இக்கூட்டத்தில்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும்‌ துறை உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்துகொண்டனர்‌.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மகப்பேறு திட்டங்களை சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டுகள்‌- 2023 போட்டி நடைபெறவுள்ள சென்னை ஜவஹர்லால்‌ நேரு விளையாட்டு மைதானத்தில்‌ நடைபெற்று வரும்‌ முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்

இந்நிகழ்ச்சியில்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ அதுல்யா மிஸ்ரா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர்‌ பங்கேற்றனர்‌.

உதயநிதியின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் காட்டம்

“மத்திய அரசில் இருப்பவர்கள் ‘அப்பன் வீட்டு பணத்தையா தருகிறார்கள்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம்” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு 2015 வெள்ளத்திற்கு பிறகு என்ன பாடம் கற்றீர்கள்? போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை மக்களை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டது நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் அளிக்கலாமே, ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்?

மாண்புமிகு ஆளுநர் தமிழிசை அவர்களின் அப்பாவின் சொத்தையோ அல்லது அமித்ஷாவின் அப்பாவின் சொத்தையோ கேட்கவில்லை. தமிழ் நாட்டு மக்கள் கட்டக் கூடிய வரியை தான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேட்கிறோம் : உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முறையே ஊழல் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமே தேவையிருந்திருக்காது.

“ஈபிஎஸ் நிதியை பெற்றுத்தர வேண்டும்”

தமிழக அரசு கோரியுள்ள ₨5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்மத்திய அரசிடமிருந்து ஈபிஎஸ் நிதியை பெற்று தர வேண்டும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஈ பி எஸ் முதல்வராக இருந்த போது 50,000 கோடி இடைக்கால நிவாரணத்தை கேட்டார். அன்றைய எதிர்க்கட்சி தி மு க பெற்று தந்ததா? இடைக்கால நிவாரணம் என்றால் என்ன என்றே தெரியாது, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையாவது கேட்டு விட்டு புளகாங்கிதம் அடைவதை நிறுத்தி கொள்ளவும். […]

சென்னை எழும்பூர் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உதயநிதி ஸ்டாலின்

அவர்கள் வருகை தந்த பின் செய்தியாளர்கள் சந்தித்தார் பின்னர்; பத்திரிகையாளர் பற்றி அவதூரான செயலை இணையதளம் மூலம் பதிவிட்ட ஆர் எஸ் பாரதியின் மகனைப் பற்றி திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரடியாக ! டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக கண்டனத்தை குறித்து நேரடி கேள்வி எழுப்பிய போது விசாரிக்கிறேன் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் […]