97.76% ரூ2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது!

ஏப்ரல் 30, 2024 வரை 97.76% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரூ7,961 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31வரை ரூ. 23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87%வைப்புத் தொகையாகவும், 13%பிறமதிப்பு நோட்டுகளாவும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ரூ. 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை

புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30க்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “தற்போதைய நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை” என்றார்.