நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.

திருப்பு முனை தரும் திருச்சி -விஜய் பேச்சு

திருச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.திருச்சி திருப்புமுனை தரும் என்று கூறினார்.

விஜய் பிரச்சாரத்தில் மைக் கோளாறு.

திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக 20 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.

விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்