ராமதாசுடன் கூட்டணி இல்லை த.வெ.க. அறிவிப்பு….
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இந்த தகவலை அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ராஜ்மோகன் மறுத்து உள்ளார். தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.
ஈரோடு விஜய் கூட்டதிற்கு 50000 கட்டணம்
விஜய் மக்கள் சந்திப்பு – இந்து அறநிலையத்துறை நிபந்தனை விதித்து உள்ளது. ஈரோடு, விஜயமங்கலம் அருகே வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ரூ.50,000 வைப்புத்தொகை மற்றும் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என 5 நிபந்தனைகளுடன் அனுமதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
அதிமுக பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி -விஜய் தாக்கு
நாமக்கல் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாவது:-அதிமுக பாஜக இடையே ஏற்பட்டு இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி அதேசமயம் திமுக குடும்பமும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது எனவே தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி அதை பார்த்துவிடலாம் என்று விஜய் கூறினார்