தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், இன்று வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.
’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
செங்கோட்டையன் கட்சித் தாவலா?
தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.
சமூக ஒற்றுமையை காப்பேன் -விஜய் உறுதி
தமிழக வெற்றி கழக தலைவர் என்று சமத்துவ கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினார் இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் அவரது கட்சி நிர்வாகிகள் பாஸ் வழங்கி . இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சமூக, மத ஒற்றுமையை 100% காப்பேன் என்று உறுதி கூறினார் மேலும் உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும் என்று அவர் கூறினார்.மேலும் பைபிளில் இருந்து யோசேப்பு கதையை சொல்லி வெற்றி பெறுவோம் என்று கூறினார்
ஈரோடும் மஞ்சளும் – விஜய் விளக்கம்
ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசும்போது மஞ்சள்… பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கனும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.. எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க… நீங்க என்ன […]
நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் த.வெ.க இணைந்தார்.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளில் இருந்த மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில்தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்தார். என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார் விஜய். நான் மெய்சிலிர்த்து போனேன். விஜயை சந்தித்த நேரத்தில் இருந்து புதிதாகப் பிறந்ததைப் போல எண்ணுகிறேன்; என்னுடைய பாதையை விஜய் தீர்மானித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது.
தவெக வில் இணைந்தார் செங்கோட்டையன்
இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார். அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். செங்கோட்டையனுடன், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். தவெகவில் செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது., மேலும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது செங்கோட்டையன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார் எனவும் […]
வெற்றிகோப்பை சின்னம் கேட்டு த.வெ.க மனு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்தனர். தவெக கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் வெற்றி கோப்பை ,ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.
த.வெ.க அலுவலகதிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள த.பெ.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு போட்டால் வந்தது இதனை தொடர்ந்து அதிரடிப்படையினர் வந்து சோதனை நடத்தினார்கள் அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளியான தெரிய வந்தது.
கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை .ஒரு சில நாட்கள் மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து போனார். 40 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் கரூருக்கு சென்று நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது தற்போது 50 குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து அவர்களை தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்காக அங்குள்ள பிரபல ஓட்டலில் 50 […]