டிடிவி – ஓ.பி.எஸ் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்

மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதே காரில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 4 பேர் திடீரென தடுப்புகளைத் தாண்டி அவைக்குள் குதித்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வண்ண புகைகளை வெளியேற்றக்கூடிய கருவிப் பொருட்களை வீசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற […]

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத் திற்குரியது

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, […]

பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது

பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. […]

பாஜக அழைப்பின் பேரில் டெல்லி செல்லும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல். டெல்லி செல்லும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனும் இணைந்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.

அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்

ஒரு கட்சி வளருவதற்காக, மற்ற கட்சியை வளர விடாமல் தடுக்கின்றன; தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது; நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”

டிடிவி தினகரனிடம் அபராதத் தொகையை வசூலிக்காத அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

1996ல் ஃபெரா சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் டிடிவி தினகரனுக்கு, விதிக்கப்பட்ட 28 கோடியை இதுவரை வசூலிக்காத அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். டிடிவி தினகரனை திவாலானவர் என ED பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ED தரப்பில் தாக்கல் செய்த மனு 18 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

திமுக ஆட்சியமைந்த பிறகு TNPSC தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன

ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.