OPS, TTV க்கு அண்ணாமலைவேண்டுகோள்
பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.
அதிமுகவுடன் கூட்டணி: டிடிவி தினகரன்
2026 தேர்தலில் அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று கூறியுள்ள அவர், அமமுகவின் உயரம் என்னவென்பது தங்களுக்கு தெரியும், அதையறிந்து உரிய இடங்களை கூட்டணியில் பெற்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். 2026 தேர்தலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதே தங்களது குறிக்கோள் என்றும் கூறினார்.
.எங்கள் கூட்டணிக்குதான் அதிமுக வந்துள்ளது: டிடிவி’
அதிமுக கூட்டணிக்கு தங்கள் கட்சி செல்லவில்லை, தங்கள் கூட்டணிக்கே அதிமுக வந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மாவின் தொண்டர்களைதான் தாங்கள் அழைத்ததாகவும், ஆனால் அம்மாவின் கட்சியே தங்களிடம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.