அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்: ட்ரம்ப்.
சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. எனது மனசாட்சியும், சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும். எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை, நான் மக்களைக் காயப்படுத்தவும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்” டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – டிரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வர்த்தக போர் மூலம் பல்வேறு நாடுகளுக்கு 100% வரியை விதித்து வருகிறார் அவர் தற்போது வெளிநாட்டில் தயாராகி அமெரிக்காவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு 100 % வரி விதித்துள்ளார்.குழந்தையிடம் இருந்து மிட்டாயை திருடுவது போல் அமெரிக்காவின் திரைப்பட வடிவத்தை திருடுகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்
டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்
ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க பல நாடுகள் ஆதரவு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நார்வே நோபல் குழுவிற்கு கம்போடிய பிரதமர் ஹன் மானெட் எழுதிய கடித்தில், “உலக அமைதியை நிலைநாட்டுவதில் ட்ரம்ப்பின் வரலாற்றுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். என அவர் கூறி உள்ளார்
டிரம்புக்கு மோடி பதிலடி
“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இந்தியா – பாக். போரை நிறுத்திய ட்ரம்ப்புக்கு அமைதி நோபல் வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் உட்பட உலகெங்கிலும் உள்ள பல மோதல்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய தாய்லாந்து மற்றும் கம்போடியா மோதல், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், […]