டிரம்ப் அடுத்த அதிரடி . மருந்துகளுக்கு 100% வரி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளுக்கு 100% வரி விதித்துள்ளார் இந்த வரி விதிப்பு இந்தியாவை பெரிதும் பாதிக்கும் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 77 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்