திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் என்கவுண்டர் செய்யபட்ட ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன
திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது

ரவுடி மணிகண்டன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதால் திருவானைக்காவலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசி தாக்கியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட்டம். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் – புரோக்கர் அதிரடி கைது

திருச்சி: உறையூர் ஏயூடிவி குடோன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (27). இவர் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் முகமது அசாருதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]
திருச்சியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு

இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது இதில் அதிர்ஷ்டவசமாக 18 பயணிகள் உயிர் தப்பினர்.
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை அவர்கள் தேர்தல் வரை முதலில் கொண்டு போகட்டும், அந்த கூட்டணியில் ஊழல் கரை படிந்தவர்கள் மட்டுமே உள்ளனர்…….. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் கேஸ் விலை 100 ரூபாய் குறைத்ததா என திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.
தினம் 500 ரூபாய்! குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அவலம்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் வாசலில் சில பெண்கள் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளைவைத்து பிச்சை எடுத்துவந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை வைத்து பிச்சை […]
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதல்வர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி முதலிடத்தையும், தாம்பரம் 2ம் இடத்தையும் பிடித்தது. நாளை (ஆக.15) சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
திருச்சியில் அறியப்படாத சுற்றுலா தலங்கள்

திருச்சியில் ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் தவிர்த்து சில அறியப்படாத சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் திருச்சியில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ள பச்சைமலை டிரெக்கிங் செல்ல சிறந்த இடம். அடுத்தது புளியஞ்சோலை. துறையூர் அருகே உள்ள இங்கு சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் நீர்வீழ்ச்சி உள்ளது. சிறு சிறு கிராமங்கள் உள்ள சிறுமலை சுற்றுலாவுக்கான இடமாகும்.
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது