முகூர்த்த நாள் : சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பக்ரீத் விடுமுறை, முகூர்த்த நாள் காரணமாக சொந்த ஊர் திரும்பிய மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவல்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.
அதிமுக சார்பில் திருச்சியில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்டுள்ள வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
திருச்சி சூர்யா நீக்கம் – பாஜக அதிரடி

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் நீக்கம் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்- பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, 2வது முறையாக தமிழக பாஜக அதிரடி முடிவு.
டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டு, திருச்சி அழைத்துச்செல்லப்பட்டார்
1896 பிறகு திருச்சியில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது

43.1 டிகிரி செல்சியஸைத் தொட்டு, 1888-க்குப் பிறகு இரண்டாவது அதிக வெப்பமான நாளாக நகரம் பதிவு செய்யப்பட்டது. திருச்சியின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இது மே 2, 1896 இல் பதிவுசெய்யப்பட்ட 43.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனைக்கு மிக அருகில் வந்தது, இது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தீவிர வானிலை நிகழ்வுகளின் தரவுகளின்படி. “1888 இல் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, […]
கனமழையால் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்
இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சி: ஆய்வில் தகவல்

2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு […]
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை
வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை. சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த சனிக்கிழமைதான் விசாரணை நடத்தினர். நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை.