பட்டியலின அமைச்சரை அவமதித்தாரா திமுக எம்.பி டி.ஆர்.பாலு? – மக்களவை சலசலப்பும் பின்னணியும்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியதை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திவிட்டதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. உண்மையில் டி.ஆர்.பாலு பேசியது என்ன? – மக்களவை சலசலப்பையும் பின்னணியையும் சற்றே விரைவாகப் பார்ப்போம். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இயற்கைப் பேரிடர் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து திமுக, மதிமுக உறுப்பினர்கள் பேசினர். அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், […]

தென் மாநில தலைவர்கள் இந்தி கத்துக்கணும்!

இண்டியா கூட்டணி சந்திப்பில் நிதீஷ் குமார் இந்தியில் பேசும்போது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மொழிபெயர்ப்பு செய்யுமாறு மனோஜ் ஜாவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு நிதிஷ்குமார் நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம். இந்தி எங்கள் தேசிய மொழி. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தாம்பரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய டி. ஆர். பாலு எம்பி

தாம்பரம் தொகுதியில் கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார்நகர், சசிவரதன் நகர் ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிப்பு அடைந்த 2800 குடும்பங்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரொட்டி, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:- தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் 5060 கோடி அனுப்ப வேண்டும் என கடிதம் மூலம் கேட்டு கொண்ட […]

டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரன் உடன் திமுக எம் பி டி ஆர் பாலு நேரில் சந்திப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார். சந்திப்பின்போது மீனவர்கள் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைதொகை 15ம் தேதி முதல் வழங்க காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கிவைக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது, பல மாநிலங்களில் மெஜாரிட்டி இல்லை என்றால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தவா முடியும், மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் சொல்லலாம் கூடுதல் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் (பாரத் மண்டபம்) தண்ணீரால் நிறம்வழிகிறது டி.ஆர்.பாலு பேட்டி:- தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவற்றை இன்று டி.ஆர்.பாலு எம்.பி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 49, […]

மோடி வந்ததே எங்களுக்கு வெற்றிதான்; டி.ஆர்.பாலு

மக்களவையில் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நேற்று பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்ததே எங்களுக்கு வெற்றி தான் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

புதிய வந்தே பாரத் ரயில் தாம்பரத்தில் நிற்க வேண்டும் டி ஆர் பாலு பேட்டி

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலதிற்குட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி 21 லட்சத்தில் அமைக்கப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். அதனயடுத்து புதியதாக கட்டப்பட்ட 3 வது மண்டல அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் திறந்துவைத்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தை டி.ஆர்.பாலு பார்வையிட்டு […]

ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, திருமலை நகர்‌ பகுதியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள்‌, ச.ஜெயபிரதீப்‌, தூ.காமராஜ்‌, சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

மக்களவையில் திமுக நோட்டீஸ்

தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் – மக்களவையில் திமுக நோட்டீஸ் “மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்”திமுக எம்.பி டி.ஆர்.பாலு