மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

வரும் 24ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தமிழக முதலமைச்சர், திருச்சியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சென்று இரவு நாகப்பட்டினத்தில் தங்குகிறார். இதைத்தொடர்ந்து 25ம் தேதி காலை திருக்குவளையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். மேலும், 26ம் தேதி தமிழக முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களின் மாவட்ட […]

உலகின் பிரம்மாண்ட பயணக் கப்பல்

1,200 அடி நீளம், 250,800 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கப்பல், ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’, 2024ம் ஆண்டு தொடக்கத்தில் தனது முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது. இதில், ரிசார்ட், தீம் பார்க், பீச் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இது, உலகின் மிகப்பெரிய கப்பலான வொண்டர் ஆஃப் தி சீஸை விட 6% பெரியது.