மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்ல இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கடைசி கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் கூட்டத்தில் கலந்து கொள்ள வர முடியாது என மமதா பானர்ஜி கூறி இருந்தார்

சின்னவர் லண்டன் சென்றார்?

பாராளுமன்றத் தேர்தலில் 24 நாட்கள் பிரசாரம் செய்தசின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வுக்காக லண்டன் சென்றார். வரும் 10ம் தேதி சென்னை திரும்புகிறார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்கின்றனர்.

கிளாம்பாக்கம் 100% சதவிகித பயன்பாட்டில் இயங்குகிறது. -அமைச்சர்கள் சிவசங்கர் – சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம்!

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை தந்துவிட்டேன். இது நமது நெருக்கமான உறவை காட்டுகிறது- UAE பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.

தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் 2 நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் – போக்குவரத்துத் துறை

வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இதுவரை 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கம். வரும் நாட்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு – போக்குவரத்து கழகம் தகவல்.

வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்!

டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார்

டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் அங்கிருந்து நாகை சென்று திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.