சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகள், மரக்கட்டைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

முடிச்சூரில் தக்காளி லாரி மோதி தூய்மை பணியாளர் உயிர் இழப்பு

தாம்பரம் முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே சாலையில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்த துப்புரவு தொழிலாளிகள் மீது தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே துப்புரவு தொழிலாளி தர்மன் என்ற தர்மு வயது 35 உயிர் இழப்பு மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் தொழிலாளிகள் குடும்பத்தினர் கதறல் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் இறக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை துப்புரவு பணி […]

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டில் ஒரு சிலர் சாலைகள், கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகள் வீசி எறிகிறார்கள்

இதைப் பார்த்த 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் எந்த குடியிருப்பில் இருந்து குப்பை வெளியேற்றப்படுகின்றது என்பதை கண்டறிந்தார். சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக சென்று குப்பைகளை திறந்தவெளியில் தூக்கி எறிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார். அவருடன் துப்புரவு மேற்பார்வையாளர் கார்மேகம் உடன் சென்றார்.

செம்பாக்கம் மண்டலத்தில் ஜெயேந்திர நகர் மற்றும் நன்மங்கலம் இணைப்பு சாலை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் வீசி சென்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்தன

39வது வார்டு திருமலை நகர் பகுதியில் எக்ஸ்னோரோ தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் ஜெயேந்திர நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் துணையுடன் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் குப்பைகள் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுப்பதாக ஜெயேந்திர நல சங்க குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் நமது மாநகரம் தூய்மை நகரம் நமது பொறுப்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, நீர் நிலைகளை […]

டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]

தாம்பரம் குப்பை கிடங்கில் திடீர் தீ

தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவி […]

சிட்லபாக்கம் 43-வது வார்டு இராமலிங்க அடிகளார் தெருவில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் குப்பையும் கூடமாக புதர் மண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது

இந்த இடத்தை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி. ஜெகன் தனது சொந்த முயற்சியால் ஜேசிபி வாகனத்தை வைத்து சுத்தம் செய்தார் சுத்தம் செய்த பின் இந்த இடத்தை அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மற்றும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி வந்தால் மீண்டும் இந்நிலைமை ஏற்பாடாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினரை அப்பகுதிவாள் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

குப்பை மேடாக மாறும் சிட்லபாக்கம் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் மேல் பொதுமக்கள் அதிருப்தி

தாம்பரம் மாநகராட்சி சார்பில் குப்பை எடுப்பதற்கு தனியாக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பொதுமக்கள் மரம் வளர்க்கின்றனர் ஆனால் மரத்தில் இருந்து வரும் மரக்கழிவுகளை எடுப்பதற்கு ஊழியர்கள்பணம் கேட்கின்றனர். வீட்டிற்கு வெளியே கொண்டு போய் மரக்கழிவுகளை வைத்தாலும் அபராதம் விதிப்போம் இல்லை என்றால் அதை எடுப்பதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.இதனால் பொதுமக்கள் இனிமேல் வீடுகளில் மரம் வளர்ப்பதை விட்டு விடுவார்கள் போல் தெரிகின்றது.இப்போது இலையுதிர் காலம் என்பதால் சாலைகளில் நிறைய மரங்களில் இருந்து விழும் இலைகள்காய்ந்து […]

அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டுப்பாடு.

பொதுமக்கள் அதிர்ச்சிதாம்பரம் ஜூலை 11அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்து வைத்தால்தான் அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றுவார்கள் என்று கூறிவந்தனர்.தற்போது 5000 சதுர மீட்டர் அல்லது 50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது அதன்படி […]