சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தம்

கடற்கரை – எழும்பூர் இடையே ₹279 கோடி செலவில் 4வது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது; 7 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்

சென்னை எழும்பூர்- திருச்செந்துார் விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன. பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது […]

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்.

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் முதவியுடன் மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு 12ம் தேதி தொடக்கம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12ம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

குரோம்பேட்டை சேர்ந்த ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த திருடனிடம் இருந்து நகையை திருடிய ‘பலே கில்லாடி’ வாலிபர்கள்

குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா விடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பெரம்பூர் […]