ரயில் விபத்து : மத்திய- மாநில அரசுகள் நிவாரணம்

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
ஆந்திர ரயில் விபத்து காரணமாக 3 ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து

மேலும் 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன – ரயில்வே அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு விபத்தில் 32 பேர் படுகாயம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி
வண்டலூரில் தண்டவாளத்தை கடந்த காது கேட்காத 3 சிறுவர் பலி

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் (15) இவருடைய சகோதரர் ரவி (15) இவர்களுக்கு காது கேட்காத நிலையில் மற்றொருவர் வாய் பேசமுடியாத சிறுவனான மஞ்சுநாத் (11) அப்பகுதியில்உள்ள அரசு பள்ளியில் சுரேஷ் எட்டாம் வகுப்பும், ரவி மஞ்சுநாத் ஏழாம் வகுப்பும் படிந்து வந்துள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு வந்தவர்கள் இன்று காலை அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மூவர் […]
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது

பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். […]
சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் இரவு நேர ரயில் சேவை இன்று முதல் அக்.17 வரை ரத்து!!

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பயணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் பலி!

ஆவடி ரயில் நிலையத்தில்விரைவு ரயில் மோதி2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பகுதியில் கேட் இல்லை எனக் கூறப்படுகிறது.பயணிகளே இரு பக்கமும் பார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சூழலே நிலவி வருகிறது. ரயில் வருவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் (செப். 24) இரவு 9 மணியளவில், பயணிகள் அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரென இரண்டு தண்டவாளத்திலும் எதிரெதிரே விரைவு […]
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிறுத்தம்…

நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் […]
இராமேஸ்வரம் – அயோத்தியா இடையே செல்லும் “ஷ்ரத்தா சேது” அதிவேக விரைவு ரயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி வழியாக கடந்த ஜுலை 27 / 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட இராமேஸ்வரம் – பைசாபாத் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால் அந்த ரயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இதனால் விஜயவாடா , நாக்பூர் , பிரயாக்ராஜ் , அயோத்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். 2017 முதல் 2023 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் 22613 / […]
நாளை சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், மூர் மார்க்கெட் – திருத்தணி, மூர் மார்க்கெட் – திருப்பதி வழித்தடத்தில் செல்லும் 9 மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், மூர் மார்க்கெட் – திருத்தணி, மூர் மார்க்கெட் – திருப்பதி வழித்தடத்தில் செல்லும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி | சரக்கு ரயிலின் மேல் ஏறி செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயம்.

கும்மிடிப்பூண்டி அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஓ புளாபுரம் பகுதியில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ்குமார்(18), நேற்று முன்தினம், சென்னை- சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில், சின்ன ஓபுளாபுரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் […]