தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது

தொடர் கனமழையால் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் தூத்துக்குடியில் மழை விடாமல் பெய்வதால் ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது. பயணிகள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் ரயில் நிலையங்களில் தவிப்பு

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் தண்டவாளம் உடைந்ததால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

9 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், முதற் கட்டமாக நான்கு பெட்டிகளை அகற்றம். துண்டு துண்டுகளாக உடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்

2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவிப்பு

சென்னை – 4வது நாளாக ரயில் சேவை மாற்றம்

மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும் சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய 7 ரயில்கள் திருத்தணி மற்றும் சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் துறையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடற்கரையில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிப்பு.

142 ரயில்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மெல்ல நகர்ந்து வருகிறது. இது டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 142 ரெயில்கள் 7ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இலாகா அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை – அரக்கோணம், கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன அம்பத்தூர் – ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்கள் காலதாமதத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

சிக்னல் பராமரிப்பு பணிகள் காலை 10 .20 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே பணிகள் தொடங்கியதால் இரு மார்க்கத்திலும் கோவை , மதுரை, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் காலதாமாக சென்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று ( 29 ம் தேதி) காலை 10. 20 மணி முதல் மதியம் 1 .50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது […]

கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு. பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று (29-11-2023) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரையான இரவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிப்பு.