சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இன்ஜின்

சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின் தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்.

நெல்லூர் ரெயில் நிலையத்தில் சென்னை பயணிகளை தவிக்கவிட்ட ரெயில்வே நிர்வாகம் !

நெல்லூர்டிசம்பர் 22 விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(22.12.23) இரவு 7.50 க்கு நெல்லூருக்கு வந்தது.இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் ரிசர்வேசன் வசதி கொண்டவை. நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவு செய்தவர்கள்ஒவ்வொரு பெட்டியிலும் 20 முதல் 25 பேர் வரை ஏறுவதற்கு தயாராக நின்றிருந்தனர். இவர்களில் வயதானவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருந்த பெண்களும் இருந்தனர். நெல்லூரில் ரெயில் நின்றதும், ஏறக்குறைய இதே எண்ணிக்கை கொண்டபயணிகள் ரெயிலில் இருந்து இறங்கினர். பெரும்பாலான […]

நெல்லையில் சீரானது ரயில் போக்குவரத்து

மழை வெள்ள பாதிப்பால் தடைபட்ட ரயில் போக்குவரத்து 3 நாட்களுக்கு பின்பு தொடக்கம். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது. சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வழியாக சென்றது. கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் நெல்லை வழியே சென்றது. திருநெல்வேலி ரயில் நிலையம் வழியாக பெங்களூர்- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் சென்றது.

தொடர் மழையால் ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

கனமழை காரணமாக தம்கரம் – ஈரோடு எக்ஸ்பிரஸ் 🚉 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி ரயில் ( சிறப்புப் பயணம்) 🚉 திருநெல்வேலி- தூத்துக்குடி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் ( சிறப்புப் பயணம்) 🚉 தூத்துக்குடி – திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத ரயில் ( சிறப்புப் பயணம்) ஆகியவற்றின் சேவைகள் இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

தொடர் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம்

முத்துநகர் மற்றும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

தென் மாவட்ட ரயில்கள் ரத்து!

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!