புத்தாண்டு சிறப்பு ரயில் முன்பதிவு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான முன்பதிவு இன்று(டிச.22) காலை 8 மணிக்கு தொடங்கியது. உடனடியாக டிக்கெட்டுகள் விந்து தீர்ந்ததால் முன்பதிவு முடிந்து விட்டது.
ஆயுத பூஜை விடுமுறை – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று மாலை 4.15 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
ஆயுத பூஜை ” தீபாவளியை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்.*
ஆயுத பூஜை தீபாவளியை ஒட்டி செப்டம்பர். 28 முதல் அக்டோபர். 26 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகர்கோயில்- தாம்பரம் சிறப்பு ரயில். விடப்படுகிறது செப்.29- அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை – கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்.. மறுமார்க்கத்தில் செப்.26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில். செப். 23 முதல் […]
ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிய மோடி
பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வைக்க சென்றார். அப்போது ராகி குண்டா ரயில் நிலையத்திற்கு சென்ற அவர் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினார்
பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்
சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையேபறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்கம் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில்மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு
சென்னை வந்தே பாரத் ரெயிலில் 15 நிமிடத்திற்கு முன்பு முன்பதிவு.
தெற்கு ரயில்வே 8 வந்தய பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது இதில் சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடங்கும்
ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது.*
ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. புறநகர் ரயில்கள், 500 கி.மீ.க்கு குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை
தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்
தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்து உள்ளது
தாம்பரம் செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்
தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரெயில் 2.தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு ஆகிய ரயில்களில் கூடுதலாக 3 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 2nd AC ,1 3rd AC, 1 Unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது இந்த கூடுதல் பெட்டிகள் சேவைஜூன் 20 முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை மின்சார ரயிலில் இருந்து விழுந்த 5 பயணி பலி
மும்பை சத்ரபதி மகராஜ் ரயில் நிலையத்திலிருந்து சென்ற மின்சார ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .அப்போது 13பேர் வாசலில் வெளியே தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இவர்கள் நெரிசலால் பிளாட்பாரத்தில் விழுந்தனர் .அதில் ஐந்து பயணிகள் பலியாகிவிட்டனர்