தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நெடுங்குன்றம் சாலையில் திருநங்கைகள் திடீர் மறியல்

10 சென்ட் நிலம் வாங்க முன்பணம் 13 லட்சம் கொடுத்த நிலையில் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டதால் நெடுங்குன்றம் பிரதான சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் வாகனங்கள் செல்ல முடியாமல் மர துண்டுகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக அதே ஊரைச் சேர்ந்த விஜி என்பவரிடம் ஒரு செண்ட் இடம் ₹3,30,000 என 10 சென்ட் 33 […]

தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர். பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு […]

வண்டலூர் அருகே லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல்

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உயிரியல் பூங்கா அருகே கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி பழுதாகி சாலையின் நடுவே நிர்பதால் பின் வரும் வாகனங்களும், அதனை தொடர்ந்து சென்னை திருச்சி தேசிய்ம் நெடுஞ்சாலையிலும் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்றுள்ளது. டாரஸ் லாரியை அகற்றும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூரில் மின்கம்பம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

வண்டலூர் அருகே கண்டிகை கிரபாக்கம் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி மின்கம்பம் உடைந்து சாலையில் சாய்ததால் பரபரப்பு இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிப்பு, மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு லாரியிலிருந்து மரக்கட்டைகள் விழுந்தன

வண்டலூர் மேம்பாலம் மீது அதிக எடையுடன் வந்த லாரியில் இருந்து மரக்கட்டைகள் மேம்பாலம் சாலையில் சரிந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவை இணைக்கும் சாலை போக்குவரத்து துண்டிப்பு. இந்த விபத்தால் வாகனங்கள் 3 கீமி தூரம் சுற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து டாரஸ் லாரியில் மரக்கட்டைகளை அதிக அளவில் ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக பன்னீர் என்பவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்துள்ளார். அப்பொழுது காலையில் முடிச்சூர் கடந்து வண்டலூர் உயிரியல் பூங்கா மேம்பாலம் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை – சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, 9.11.2023 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.புதிய போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:

சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், சோதனை முறையில் சில போக்குவரத்து மாற்றங்கள் இன்று (அக்.10) முதல் செய்யப்படுதுங்கோ. !

போக்குவரத்து மாற்றம் – விபரம்! ஸ்மித் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணா சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஆனால் ஓயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை. பட்டுல்லாஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை செல்லலாம். ஆனால் அண்ணா சாலை – பட்டுல்லாஸ் சாலை […]