தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர்

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு மேல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று ஆய்வுசெய்ய உள்ளனர்.
ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி: அரசு முழு வீச்சில் செயல்பட்டதாக மாவட்ட கலெக்டர் தகவல்

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலியாகினர் என்றும் அரசு முழு வீச்சில் செயல்பட்டதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.ஊட்டி, தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது. மரப்பாலம் […]