தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கௌரவம் பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஸ் குமார் நியமனம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி சிவசங்கர் நியமனம் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமி சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால் வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி முதல்வராக பவானி ஈரோடு மருத்துவ கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக ஜெய்சங்கா் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக லோகநாயகி தேனி […]
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய விதிகள் .

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு, 2023ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தாலும், விதிகள் வகுக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், இந்த சட்டத்துக்கான விதிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடு குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் […]