திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவண்ணாமலை புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மலையே மகேசன்’ எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலையில் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி வரும் செவ்வாய்கிழமை (செப்.17) காலை 11.27 மணிக்கு தொடங்கி, மறுநாள் புதன்கிழமை (செப்.18) காலை 9.10 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நிழற்பந்தல்கள், குடிநீர், நீர் மோர் பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை தீப திருவிழா மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையில் இருந்து வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை – தி.மலை இடையே 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் சிவசங்கர்.

ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழைக்கு நடுவே பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர்.திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று வருகிறது. அதன்படி நேற்று காலை 10.58 மணிக்கு கிரிவலம் தொடங்கி இன்று காலை 7.05 மணி வரை […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் (2ம்தேதி) இரவு 7.45 மணிக்கு தொடங்கி, 3ம்தேதி மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கத்தைவிட கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பவுர்ணமியில் இருந்து முதன்முறையாக சிறப்பு ரயில்கள் இயக்க […]