திருவள்ளூரில் அடாவடிதனம் செய்த ரவுடிகளை பிடித்து சிறப்பு செய்த காவல் துறை
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ரௌடிகளை கைது செய்தனர் காவல்துறையினர். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய ரவுடிகள் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூரில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கனகா(57) என்ற பெண் உயிரிழந்தார்
தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தபோது கனகா உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை செய்யபட்டுள்ளார். 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வெட்டி கொலை செய்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாரிநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்தார். இவர் 2011-14 -ம் ஆண்டில் பாடிய நல்லூர் […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறை 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை