வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி செப். 18 முதல் 26ம் தேதி வரை திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.18ம்தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தெரிவித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதற்கான போஸ்டர் வெளியீடு விழா ஏழுமலையான் கோயில் முன்பு நேற்று நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி தர்மா வரவேற்றார். அப்போது, தேவஸ்தான அறங்காவலர் […]
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 24 புதிய உறுப்பினர் நியமனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 24 புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான பரிசீலனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் […]
திருப்பதியில் தரிசன முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நவம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப் பாதையில் கரடி வந்ததால் பரபரப்பு!

கடந்த மாதம் சிறுத்தை ஒன்று இதே நடைபாதையில் வந்து 4 வயது சிறுவனை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் சிறப்பு தரிசனம் டிக்கெட் முன்பதிவு

திருமலை திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்கள் (300 ரூபாய்) ஜூலை 25 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு. மேலும் பண்டிகை காலங்களை ஒட்டி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் ஜூலை 25ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு முன்பதிவு இணைப்பு: https://tirupatibalaji.ap.gov.in