ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? – நீதிபதிகள்

தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாமிரபரணியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிரம்பியது ஆயன்குளம் அதிசய கிணறு: என்ன நடந்தது?

திருநெல்வேலியில் மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணற்றில் நீர் வேகமாக நிரம்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, முதுமொத்தன்மொழி ஊராட்சி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு உள்ளது. இந்தக் கிணறுக்குள் எவ்வளவு வெள்ளத்தை திருப்பி விட்டாலும் நிரம்புவதே இல்லை. 2022ல் பெருமழை பெய்து உருவான வெள்ளம் கிணறுக்குள் பாய்ச்சப்பட்டபோதும் கிணறு நிரம்பவில்லை. ஐ.ஐ.டி., பேராசிரியர்களின் ஆய்வில், சுண்ணாம்புப் பாறைகளால் உருவான பகுதி என்பது தெரிய வந்தது. சுண்ணாம்பு பாறையில் […]
திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ப்பு!
திருநெல்வேலி – தூத்துக்குடி இடையே முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் முழுவதும் ரத்து
திருநெல்வேலி – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து – தெற்கு ரயில்வே
கடந்த 20 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 35 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது!
திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு ;இடம் வசவப்பபுரம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது