புலி பிடிக்கும் கூண்டில் வனத்துறை ஊழியர்களை சிறை வைத்த கிராமம்

கர்நாடக மாநிலம் பொம்மனகுண்டு என்ற இடத்தில் காட்டுக்குள் புலி வந்ததாக கிராமவாசிகள் கண்டுபிடித்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது இதனால் வனத்துறை ஊழியர்களை அவர்கள் கொண்டு வந்த புலி பிடிக்கும் கூண்டுக்குள் அடைத்து வைத்தார்கள். பல மணி நேரம் பேச்சு நடத்திய பிறகு அவர்களை வெளியே விட்டனர்

திருப்பதியில் சாலையில் சென்ற வாகனத்தின் மீது பாய்ந்த சிறுத்தை

திருப்பதி அலிபிரியிலிருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையில் நேற்று இரவு பைக்கில் சென்ற ஒருவர் மீது திடீரென சிறுத்தை ஒன்று ஓடி வந்து பைக்கில் சென்றவரை தாக்க முயன்றது. இதில் பைக்கில் சென்றவர் நொடிப் பொழுதில் தப்பினார். பைக்கை பின் தொடர்ந்து சென்ற காரில் உள்ள கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளன

மனிதனைப் போல நிமிர்ந்து நின்ற சிறுத்தை

தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருகர் தேசிய பூங்காவில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுத்தை, புல் காடுகளில்… இரு கால்களிலும் நின்றபடி பார்த்தது. மனிதன் போல் நிமிர்ந்து, மேலே பார்த்தபடி அடுத்த வேட்டையை எதிர்பார்த்தது… சிறுத்தைகள் சில நேரம் மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். அது வேட்டைக்கான பார்வையை கூர்மையாக்கும் ஒரு முயற்சி. ஆனால் இவ்வளவு நேரம் நிற்காது என்பதுதான் வனவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியமடைகின்றனர்.

கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரின் மகன் உள்பட உறவினர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் பென்டென்டில் புலிபல் பதித்திருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியானது

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் பெலகாவில் உள்ள லட்சுமி ஹெப்பாள்கர் வீட்டிற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.அப்போது புலி பல் பொருத்திய செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். தனது மகள் திருமணத்தின் போது, யாரோ பரிசு கொடுத்த செயின் இது. அதில் இருக்கும் புலி பல் ஒரிஜினல் கிடையாது. பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்வதாக கூறி அதிகாரிகள் எடுத்து சென்றனர்.