மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸப் எண்கள் அறிமுகம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸப் எண்கள் அறிமுகம் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தல்

தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்லும் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்.

மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் பொய்யானது. தூத்துக்குடி மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்

மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாகவும், அது திறந்து விடப்படுவதால் தாமிர பரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஒரு ஆடியோ வாட்ஸ்அப் குரூப்பில் பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தூத்துக்குடி கேம்பலாபாத் மக்கள் விசாரணையில் இறங்கியபோது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக மணிமுத்தாறு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பேசிய ஆடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தூத்துக்குடி மக்கள் பதட்டப்பட வேண்டாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்களில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தூத்துக்குடிக்கு செல்ல அறிவுறுத்தல்

10 குழுக்கள் தூத்துக்குடியில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதி பயங்கர கனமழை பெய்துள்ளது

காயல்பட்டினத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 86 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. திருச்செந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 67 செமீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரையில் 60 செமீ மழை பதிவாகியுள்ளது.