முதலில் பேரிடர் இல்லை என சொன்னார்கள், தற்போது பேரிடர் பாதிப்பை பார்வையிட வருகிறார். வந்து பாதிப்புகளை பார்த்துவிட்டு தகுந்த நிதியினை வழங்க வேண்டும்

பெருவெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய நிதியமைச்சர் தூத்துக்குடி வருவது குறுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாக செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம்

அவருக்கு பதிலாக கோபாலகிருஷ்ணனை ஏரல் தாலுகா தாசில்தாராக நியமனம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உத்தரவு

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. ▪️ வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். ▪️ தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது.

தூத்துக்குடி வெள்ளத்தில் மாட்டுத் தொழுவம் மூழ்கியதால், மாடுகளை பத்திரமாக மீட்டு தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கட்டிவைத்து பாதுகாத்து வரும் உரிமையாளர்கள்

“மின் கம்பங்கள் எல்லாம் தண்ணீல விழுந்ததால கொஞ்சம் சவாலா இருக்கு, ஆனா கூடிய சீக்கிரம் கரண்ட் தந்துடுவோம்”

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பெருமழையில் சேதமான மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நம்பிக்கை

தூத்துக்குடி : “வெள்ளம் பாதித்த பகுதிகளில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்”

-ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர்

800 குடும்பங்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக வெள்ளத்தில் அவதிப்படுகிறார்கள். உதவி கேட்டு மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் கேம்லாபாத், ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் அரசு உதவிக்கரம் நீட்ட வலியுறுத்தும் வருகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகை ரூ10,000 ஆக உயர்வு