வேலை நிறுத்தம் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்*

தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தங்களுக்கு என்எல்சி-யில் வழங்குவது போல் ஊதியம் வழங்க கோரி 11 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.

நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும்..

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக.. தூத்துக்குடி சென்னைஎழும்பூர் முத்து நகர் ரயில் (12694),தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதலும் ஏப்ரல் 16 வரையும், மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் […]

தூத்துக்குடி கைதியை பாளையங்கோட்டை சிறையில் அடித்துக் கொல்ல முயற்சி.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருதவேல் என்ற விசாரணை கைதி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, கொலை மிரட்டல், பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புகாரில் இவருடன் கைதான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும் சிறையில் உள்ளனர். பிரபல ரவுடி ஒருவரின் வீட்டில் மான் கொம்பு, துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பப்பற்றப்பட்டது, நெல்லை ரவுடி ஒருவரின் காதலி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக ஒரே குழுவைச் சேர்ந்த கைதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.இந்த நிலையில் […]

தூத்துக்குடிக்கு அனுப்ப பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் குவிந்த நிவாரண பொருட்கள்

தூத்துகுடி மாவட்டம் காலங்கரை பகுதி அதித கனமழையால் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையில் பல்வேறு தன் ஆர்வலர்களிடம் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, ரவா, கோதுமை மாவு, ரொட்டி, பிஸ்கட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை குவித்தன. அதனை காவல் துறையினர் லாரியில் ஏற்றி தூத்துகுடி மாவட்டம் காலங்கரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மழை வெள்ளத்தை முன்பே உணர்த்திய அதிசய பூச்சிகள்

நெல்லை, தூத்துக்குடியில் பெரும் வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் மொட்டை மாடியில் உயரமான சுவர்களில் ஒரு வித பூச்சிகள் வந்தன.இப்பூச்சிகளின் வருகையால் திகைத்துப்போனவர்கள் இதனை விரட்ட படாதபாடு பட்டும் பயனில்லை! ஊர்ந்தும், பறந்தும் சுவர்களின் விளிம்புகளில் புகலிடம் தேடிக்கொண்டன! இரண்டு நாட்களுக்குப் பிறகு … இப்பூச்சிகளில் எந்த அளவு உயரத்தில் இருந்ததோ, அதன் உயரத்திற்கு ஓரடி கீழே மழைநீர் வந்தது! நெல்லை, தூத்துக்குடியில் வழக்கத்திற்கு மாறாக வானிலை கணிப்புகளைக் கடந்தும் கனமழை பெய்யுமென்றும், பெரும் […]

இயல்பு நிலைக்கு திரும்பும் தூத்துக்குடி

பெருமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து சீராகி உள்ளது. அதேபோல தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஆனால் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு இதுவரை ரயில் போக்குவரத்து தொடங்கபடவில்லை. பஸ்கள் வேறு வழியாக சுற்றி நெல்லைக்கு செல்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் தனியாக அணியை சரியாக […]

தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதன் பின் மக்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.