மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்:

திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி நன்றி. 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவராவதே தனது லட்சியம் எனவும் மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி டாக்டர் மரணம்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. . கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் […]