கார்த்திகை தீபத்தையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து தி.மலைக்கு 2 ரயில்களும், திருச்சியில் இருந்து தி.மலை வழியாகவேலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.13ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு.

அதனை ஈடுசெய்யும் வகையில் டிச.21ம் தேதி வேலைநாளாக அறிவிப்பு.
திருவண்ணாமலையில் மண் சரிவு – ரூ.5 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு இன்று இரவுக்குள் நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு..
திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் […]
7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]
திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.இதன்பிறகு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. […]
கார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து – திணறும் திருவண்ணாமலை

திருவண்ணாமலைகார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து – திணறும் திருவண்ணாமலைமகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது

2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்
திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை திருவண்ணா மலையில் களைகட்டும் கார்த்திகை தீபத் திருவிழா

7ம் நாளான இன்று பஞ்சரத தேரோட்டத்தில் பங்கேற்று அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள்!
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 4050 கன அடியாக உள்ளது

அணையின் நீர்மட்டம் 119 அடியில் தற்போது 117 அடியாக உள்ளது.அணையில் இருந்து தற்போது 1950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.