சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழை பதிவு

பொன்னேரி 14 செ.மீ,சோழவரம் 13 செ.மீ,செங்குன்றம் 12 செ.மீ,கும்மிடிப்பூண்டி 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே நகை வியாபாரி சேஷராமை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேஷராமை வழிமறித்த கத்தியால் வெட்டி நகை,பணத்தை கொள்ளையடித்த எழிலரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொழுவூர் பகுதியில் நகைவியாபாரி சேஷராமை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் ஏற்கெனவே ஆதித்யா, சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.