திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என் காரணமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

புரட்டாசி மாத பிறப்பு திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி திருப்பதிஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி, கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டோக்கன் பெற்றவர்கள் 7 மணி நேரம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி […]

திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டரை கிலோ தங்க சங்கு சக்கரம் காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு பக்தர் 2 1/2 கிலோ எடையில் தங்கத்தில் சங்கு சக்கரம் தயாரித்து அழைத்துள்ளார் இதன் மதிப்பு ரூபாய் 2 கோடியே 40 லட்சம் ஆகும்.கோவிலில் உள்ள ரங்கநாயக் உலா மண்டபத்தில் சங்கு சக்கரத்தை கோவில் நிர்வாக அதிகாரியிடம் வழங்கினார்கள்

திருப்பதியில் தரிசனம் செய்ய 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்சர்வ தரிசனம் செய்ய தற்போது 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். மேலும் இன்று சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி கோவிலில் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து

கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய 20 முதல் 25 மணி நேரம் ஆகிறது. இதனால் வரும் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

அந்நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட 4 நெய் மாதிரிகள் தரமற்ற இருந்தது சோதனையில் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம்

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாந்தி யாகம் வளர்க்கப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 10 மணி வரை ‘சாந்தி யாகம்’ நடைபெறுகிறது. கோயிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் ‘சாந்தி யாகம்’ நடத்தி வருகின்றனர். இதில், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

லட்டு விவகாரம்: நாளை முதல் 3 நாட்கள் திருப்பதியில் சாந்தி யாகம் நடத்துவது என்று ஆந்திராவில் முடிவு செய்யப்பட்டது

மேலும், லட்டு தயாரிப்புக்கூடம், நெய் இருப்பு வைத்துள்ள இடங்களையும் சுத்தப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் விஐபி தரிசனத்திற்காக திருமலையில் உள்ள செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்த ஒருவர் தான் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் எனக்கூறி கொண்டு அடையாள அட்டை காண்பித்து விஐபி தரிசன டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார்.அவரது செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விஜிலென்ஸ் விசாரணையில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. அவரது பெயர் விஜயவாடாவை சேர்ந்த நரசிம்மராவ் என்பதும், ஏற்கனவே குண்டூர், விஜயவாடாவில் இதேபோன்று பல […]