திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி

`தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவனுக்கு ராசா வலியுறுத்தல்

ஈரோடு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்தவிசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திமுகவினர் கொந்தளிப்பு: குறிப்பாக, அமைச்சர் உதயநிதியைக் குறிவைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் […]

‘ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்’ – திருமாவளவன்

அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். அனைத்துக் கட்சிகளும் மது, போதைப்பொருள் வேண்டாம் என்ற கருத்தில் உடன்படுகின்றன. கட்சிகள் உடன்பட்டாலும் நாடு முழுவதும் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன; மது ஆலைகள் இயங்குகின்றன. எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை எனும்போது மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன? ‘மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்’ என தான் பேசிய வீடியோவை X தளத்தில் பகிர்ந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு – எல்.முருகன் கருத்து!

“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”. “திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”. “மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”. “திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.

தனித்து விடப்பட்டாரா திருமாவளவன்?

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக தொல் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இன்றைய தேதி வரை அவரது அன்றாட நிகழ்வுகள் தொகுதி வேட்பாளர் என்ற முறையிலும் சரி கட்சி தலைவர் என்ற முறையிலும் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்பார்கள். ஆனால், தொகுதிக்குள் யாரை கேட்டாலும் தலைவர் நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெளிவாக கிடைப்பதில்லை எனவும் பெரும்பாலான நிர்வாகிகள் தொலைபேசியை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு பத்திரிகையாளர் மத்தியில் கூறப்படுகிறது.பத்திரிகையாளர்களிடம் இருந்து […]

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், வி.சி.க.தலைவர் திருமாவளவன் எம்.பி. சந்திப்பு

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு, அறிவாலயத்திற்கு பேச்சு நடந்த வரும்படி அழைத்த நிலையில் திருமாவளவன் தனியாக ஸ்டாலினை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக […]

நீட் விலக்கு – திருமாவளவன் கையெழுத்திட்டார்

திமுக சார்பில் நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு சென்று திருமாவளவனிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திருமாவளவன் அவர்களை மருத்துவ மனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை இன்று மருத்துவ மனையில் நேரில் சந்தித்து. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாலர் பிர்தெளஸ் துணை பொது செயலாளர் முஹம்மது சிப்லி, மாநில செயலாளர் அபு பைசல் மற்றும் நிர்வாகிகள் நலம் விசாரித்தார்கள். உடன் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துர் […]