தனியார் பால் நிறுவன அதிகாரி போலீசாரால் அடித்துக் கொலையா?

திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் நவீன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அஜித்குமார் கொலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்