திருச்செந்தூர் கடலில் குளிக்க கட்டுப்பாடு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். தற்போது அந்த கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது. வயதானவர்கள் தனியாக குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கட்டை கட்டி வைத்துள்ளனர்
குடமுழுக்கு விழா:திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
வருகிற ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூரில்.பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.திருப்பதியை மிஞ்சும் பிரமாண்டத்துடன் முருகன் கோவில் ஜொலிக்கிறது பழமையை மீட்டெடுத்துநவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறதுஎச்.சி.எல் அதிபர் சிவநாடார். அளித்த 200 கோடி நன்கொடையாலும் அரசு மற்றும் அறநிலைய துறை சார்பிலும் சுமார் 200 கோடி செலவு செய்து இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கி உள்ளனர்புதியகலையரங்கம்,அன்னதான கூடம் , நாழிக்கிணறு பாதை, ஏராளமான விடுதிகள் மட்டுமல்லாமல் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாற ஏராளமான படிக்கட்டுகள் என […]
நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் துண்டிப்பு

திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தம் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடக்கம் திருச்செந்தூரில் மின்சாரம் இணைப்பு, தொலைதொடர்பும் துண்டிப்பு வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க மக்கள் கோரிக்கை.
புகழ்பெற்ற திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா சுவாமி புறப்பாட்டின் போது வாணவெடி வெடிக்க தேவஸ்தானத்தில் பணம் இல்லையாம்

கடந்த மாத வருமானம் 2 கோடியாம் ,வெடிக்கு உபயதாரர் இல்லாததால் வெடி போடவில்லை என்று திருக்கோவில் இனை ஆணையர் தகவல் , அறநிலையத்துறை உண்டியல் பணத்தை கோவிலுக்கு கூட செலவு செய்யாதா ? முன்கூட்டியே நிர்வாகம் வாணவெடிக்கு உபயதாரர் தேவை என்று விளம்பரம் செய்திருந்தால் நூற்றுக்கணக்கில் வந்து இருப்பார்கள். இணை ஆணையர் கார்த்திக் ஏன் இதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை ?என திருச்செந்தூர் அணைத்து சமுதாய மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்
சென்னை எழும்பூர்- திருச்செந்துார் விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன. பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஜூலை மாத உண்டியலில், ₹3.09 கோடி ரொக்கம், 1900 கிராம் தங்கம், 29,000 கிராம் வெள்ளி, 30,000 கிராம் பித்தளை, 10,000 கிராம் செம்பு, 3,500 கிராம் தகரம் மற்றும் 552 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்!