திருச்செந்தூர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

தமிழக அரசு செய்திக்குறிப்பு: வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த, இந்து மதத்தைச் சார்ந்த ஆன்மீக ஈடுபாடுள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2000 தம்பதியருக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.