ஓபிஎஸ் தினகரனை கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி எதிர்ப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது.சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கூட சேர்க்க முடியாது” என்று பழனிசாமி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், “அப்படி எனில், தென் மாவட்டங்களில் அவர்களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்காமல் போகும். இது திமுக வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிடுமே. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்காதா” என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு, “அவர்களிடம் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்கு வங்கி இல்லை.என்று எடப்பாடி […]
2026-ல் எடப்பாடி தோற்பது உறுதி – தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல. சசிகலா கூறியதால்தான் 122 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியவர்தான் இபிஎஸ் .அவருக்கு நன்றி என்பதே கிடையாது அவர் 2026 தேர்தலில் தோற்பது உறுதி என்று- டிடிவி தினகரன். கூறினார்
எடப்பாடி தான் பிரச்சனை – தினகரன் பேட்டி
இபிஎஸ் தலைமையில் என்றைக்கும் இணைய மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் தங்களுக்கு பிரச்சனை இல்லை என கூறினார்.
அண்ணாமலை போல் நயினார் இல்லை -தினகரன் புகார்
கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை .அண்ணாமலை இருந்தபோது எங்களுக்கு உரிய மதிப்பு கொடுத்தார் என தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.இதுபற்றி நைனார் நாகேந்திரன் கூறும் போது தினகரன் ஏன் அப்படி சொன்னார் என தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.