மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா கடந்த ஜூன் 27-ந் தேதி துவங்கியது. தொடர்ந்து 7ஆம் நாள் மற்றும் 11ஆம் நாளில், மேலக்கடலாடியில் உள்ள அவரது நினைவிட அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாகக் […]