இரும்பு கடையில் பார்சலை திருடும் கொள்ளையன் சிசிடிவியில் சிக்கினான்

சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் உள்ள யோகலஷ்மி ஹார்டுவேர்ஸ் கடைக்கு தேவையான பார்சல் லாரியில் வரும் நிலையில் அதிகாலை கடைமுன்பாக வைத்து விட்டு செல்வது வழக்கம் அதனை கடை திறக்கும்போது எடுக்கும் நிலையில் சமிப் நாட்களில் பார்சல் இல்லை என்பதால் அனுப்பிய நபரிடம் விசாரித்துள்ளார். அவர்கள் இறக்கிவிட்டு சென்றதாக கூறியதால் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியை பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பார்சலை திருடி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த […]

உடல் உறுப்புக்களை விற்று தருவதாக நம்பவைத்து மோசடி செய்த கும்பலை பெங்களூரில் கைது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் அன்று சென்னை பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு மேலாளர் அளித்த புகாரின் பேரில் தங்களது தனியார் மருத்துவமனையின் இணைதளத்தை போன்று போலியான இணையதளத்தை உருவாக்கி கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் போலி இணையதளத்தில் உடல் உறுப்புகள் விற்று தருவதாக போலி விளம்பரங்கள் செய்து வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார் பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர். இ.கா.ப […]

தெருவில் நின்ற குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சேலம்ஓமலூர்:- ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வடமாநில வாலிபர் சேலம் மாவட்டம், ஓமலூரை […]

முடிச்சூரில் டாட்டு குத்திய கொள்ளையன் அட்டகாசம் அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் மளிகை, சலூன், ஹர்டுவேர்ஸ், செல்போன் கடைகள் இயங்கி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் கடைளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் காலை வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சலூன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கபட்டிருந்த மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் மளிகை கடையின் சிமெண்ட் சீட்டை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் […]

திருச்செந்தூரில் பிடிபட்ட பைக் திருடிய வாலிபர்

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் அய்யப்பன் (38) என்பவர் நேற்று அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தைச் சேர்ந்த வினோத் குமார் (20) என்பவர் அய்யப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் […]

பீர்க்கங்காணையில் ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை மறைமலை அடிகல் தொருவை சேர்ந்தவர் செல்வராஜ்(62) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சொந்த வேலைகாரணமாக நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார். கிரில் கேட், கதவு உடைத்து உள்ளே. சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 7 சவரன் நகை, வைர தோடு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் தடயங்களை பதிவு செய்து விசாரனை செய்துவருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

பண்ருட்டி அருகே சின்ன ஒடப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (61). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு பாச்சாரபாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் வாரண்டாவில் மறைத்து வைத்து இருந்த சாவி எடுத்து பிரோவில் இருந்த […]

வேங்கை வாசலில் வீடு புகுந்து 75 பவுன் நகை கொள்ளை

வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு(56) பொறியாளரான இவர் அதே வேங்கைவாசலில் உள்ள டியானோ நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்கிறார். இவர் மனைவி சகுந்தலா ஆசிரியராகவும் மகள்கள் இரண்டுபேர் மாணவிகளாகவும் உள்ளனர். இன்று வழக்கம்போல் கதவை பூட்டி சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியபோது முன் கதவு கடபாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த இரண்டு பிரேக்களில் வைக்கப்பட்ட 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் […]

2 டன் தக்காளியை லாரியுடன் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்!

2 டன் தக்காளி கடத்தல் – பரபரப்பு சம்பவம்! கர்நாடகா: தனது நிலத்தில் விளைந்த 2.5 லட்சம் மதிப்பிலான, 2 டன் தக்காளியை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்திச் சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை

குரோம்பேட்டை குடியிருப்பில் செருப்பு திருடிய திருடன் , மின்சாரத்தையும் துண்டித்தான்…

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது மெயின் ரோட்டில் டி.டி.வி மத்வா குடியிருப்பு உள்ளது.இங்கு மதியம் சுமார் 1.30 மணி அளவில் ஒருவன் தரைதளத்தில் உள்ள வீட்டில் திருட வந்தான்.உள்ளே ஆட்கள் இருந்ததால் வெளியே வாசலில் இருந்த விலை உயர்ந்த காலணிகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் மின்சாரத்தையும் துண்டித்து விட்டு சென்றுவிட்டான். இந்த வளாகத்தில் கண்காணிப்பு கேமரா மூலமாக அடையாளம் கண்டு காவல்துரைக்கு புகார் கொடுக்கபட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.