கிழக்கு தாம்பரம் வழிப்பறி கொள்ளையரை சிசிடிவி மூலம் பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க […]

சேலையூர் பகுதியில் பட்டப் பகலில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு

சேலையூர் அருகே அடுத்த அடுத்த இரண்டு நாட்களாக பட்டம் பகலில் இரு பெண்களிடம் 5 சவரன் செயின் பறிப்பு, இரு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என சிசிடிவி காட்சியை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கம் மாருதி நகரை சேர்ந்த 70 வயது பெண்மணி சித்தாலஷ்மி, நேற்று மதியம் பால் வாங்க பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டருகே நடந்துசென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் நகையை பறித்து சென்றான். […]

கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நகைகள் திருடப்பட்டது . இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய நகைகளை கோவில் முன்பே இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர் .

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]

சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]

சிட்லபாக்கத்தில் 50 பவுன் நகை கொள்ளை

சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். […]

குரோம்பேட்டை செல்போன், துணிக்கடையில் ரூ.24 லட்சம் அதிரடி கொள்ளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு 24 லட்சம் மதிப்புள்ள செல்போன், துணிகள் கொள்ளை சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை மொபைல் பிளாசா எனும் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தவர் தமிம் அன்சாரி, நேற்று வழக்கம்போல் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க முயன்றபோது கடையின் பின்பக்கம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 20 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள் கொள்ளை போனது […]

தாம்பரம் அருகே திருமண வீட்டில் நகை பணம் கொள்ளை

தாம்பரம் அருகே திருமண வீடு உள்ளிட்ட இரண்டு வீட்டில் கொள்ளை, இரண்டரை லட்சம் பணம், 2 லேப்டாப், வெள்ளி பெருட்கள் உள்ளிட்ட 5 லடசம் மதிப்புள்ள பணம் பொருள் கொள்ளை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(35) ஐ.டி கம்பெனியில் பணி செய்துவரும் நிலையில் இவரின் தம்பிக்கு மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால் வீட்டின் முன்பக்கம் வாழை மரம் கட்டி அளங்காரம் செய்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றனர். இன்று காலை அக்கம் […]

பெருங்களத்தூர் நகைக்கடையில் செல்போனை திருடிய மர்ம ஆசாமி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ். இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு […]

முடிச்சூரில் இருசக்கர வாகனம் திருடும் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி‌ விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் […]