குலசை தசரா விழா ஆபாச நடனங்களை தடுக்க நடவடிக்கை

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை. சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . தசரா குழுவினர் தங்கள் குழுவுக்கு அதிக வருமானம் பெற சின்னத்திரை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆடுவதாக புகார் வந்ததன் பேரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது