இந்தியர்கள் தாய்லாந்து செல்ல வேண்டாம் – மத்திய அரசு
இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் முதன்மையானது தாய்லாந்து ஆகும் தற்போது அந்த நாட்டுக்கும் கபோரியாவுக்கும் மோதல் ஏற்பட்டு 15 பேர் பலியாகி விட்டனர் இதன் காரணமாக இந்தியர்கள் தற்போது தாய்லாந்து செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,பர்மா ரயில்பாதைஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,

தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்“ திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம் அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின் தூதர் திரு.ஜோஜி சாமுவேல் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

தாய்லாந்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை, அடுத்த மாதம் முதல் மே-2024 வரை நீக்குவதாக, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்கயியலும்.