குரோம்பேட்டை பத்மநாப நகரில் அமைந்துள்ள தன்வந்திரி, லக்ஷ்மி நரசிம்ம ஆஞ்சநேய இராகவேந்திரர் மடத்தில் உகாதி உற்சவ விழா (தெலுங்கு வருடப்பிறப்பு) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

இராகவேந்திரர் ப்ருந்தாவனத்திற்கும் மற்ற மூர்த்திகளுக்கும் வெள்ளிக்கவசத்துடன் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு ஹரிவாயுஸ்துதி புணச்சரணத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு மதியம் நான்கு மணிக்கு பிரபல பண்டிதர் நெய்வேலி இராமன் பஞ்சாங்க ஸ்ரவணம் மிகத்திரளான பக்தர்கள் பங்கேற்க சிறப்பாக நடந்தது. இந்த பஞ்சாங்க கையேடை ஸரஸ்வதி பதி (தத்வவாத ஆசிரியர்) வெளியிட முதல் பிரதியை பாரிஜாத ஸ்ரீனிவாஸராவ் பெற்றுக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கையேடு அளிக்கப்பட்டது.

குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினர் வெகு விமர்சையாக செய்திருந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் விஐபி தரிசனத்திற்காக திருமலையில் உள்ள செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்த ஒருவர் தான் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் எனக்கூறி கொண்டு அடையாள அட்டை காண்பித்து விஐபி தரிசன டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார்.அவரது செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விஜிலென்ஸ் விசாரணையில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. அவரது பெயர் விஜயவாடாவை சேர்ந்த நரசிம்மராவ் என்பதும், ஏற்கனவே குண்டூர், விஜயவாடாவில் இதேபோன்று பல […]

குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும் 9 மணிக்கு சங்கல்பம் 10மணிக்கு அனுக்ஷை புண்ணியாக வாசகம் கும்ப பூஜை 11:30 மணிக்கு ஹோமங்கள் 12 30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று ஒரு மணிக்கு மகா தீபாரணை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு […]

ராமேஸ்வரம் கோயில் மூலவரின் அபூர்வ படம்

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சீதா தேவியால் கடற்கரை மணலிலே உருவாக்கபட்டு ஸ்ரீராமரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம்தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சிவலிங்கத்தினை தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.காண்பதற்கரிய இந்த மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமியின் புகைப்படம்.

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படும் திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளன.இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும்.“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை […]

பச்சைப்பட்டினி விரதம் சமயபுரம் மாரியம்மன்

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருக்கும் நடைமுறைக்கு மாறாக, குழந்தைக்குப் பத்தியம் இருக்கும் தாயின் கருணைப் பெருக்கால் உலக நன்மைக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் காக்கிறாள் மாசி மாதக் கடை ஞாயிறு பூச்சொரிதல் விழாவுடன் இந்த விரதம் தொடங்கும் .பூச்சொரிதலின் போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும்.சித்திரை, வைகாசி கத்திரி வெயிலின் தாக்கத்தைத் தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு,மக்களைக் குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூமாரி பொழிந்தும், இளநீர், மோர், பானகம்,வெள்ளரிப்பிஞ்சு, துள்ளுமாவு […]

திருச்செந்தூர் முருகன் சிறப்பு

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக் கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல […]