நாராயண மண்டலி விழா

குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள நாராயண மண்டலி மகளிர் குழு 17வது நாராயணீய சப்தாஹத்தை கொண்டாடுகிறது. நேற்று தொடங்கிய விழா 16 ஆம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விழா நடைபெறுகிறது. இதில் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு குருவாயூரப்பன் அருளை பெறும்படி நாராயண மண்டலி மகளிர் குழு வேண்டியுள்ளது. தொடர்புக்கு 97898 04463

ஆடி கிருத்திகை முன்னிட்டு அஸ்தினாபுரம் ஸ்ரீ நவ பாசன தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆறுபடை வீடு முருக பக்தர்கள் சேவா சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது

இவ்விழாவில் கண்ணன், நாகராஜன், கிரி, பாபு, ரமேஷ், சண்முகம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

குரோம்பேட்டை MIT அருகே அமைந்துள்ள Home Finders Court Flat வளாகத்தில் உள்ளே அமைந்துள்ள சர்வ மங்கல ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில் 23 ஆம் வருடம் ஏக தின இலட்ச்சார்ச்சனை தலைவர் அலமேலு பாட்டி, உபதலைவர் ராதா மாமி, பார்த்தசாரதி மாமா மற்றும் கோயில் கமிட்டி ஸ்ரீமதி அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது

அன்றைய தினம் மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் வளாக கலைஞர்கள் வழங்கும் குரலிசை, வீணையிசை, கீபோர்ட் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி, அதை அடுத்து உற்சவமூர்த்தி அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

திருவான்மியூர் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்தவர் கீழே விழுந்து பலி

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியார் உயிரிழப்பு உழவாரப் பணி செய்தபோது நேர்ந்த துயரம் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில்( உழவாரப்பணி) சுத்தம் செய்வதற்காக சிவனடியார்கள் சுமார் 30 நபர்கள் இன்று வந்தனர். இதில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி(44) என்பவர் கோபுரத்தில் ஏரி சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சற்றுமுன் […]

தாம்பரம் தீமிதி திருவிழாவில் விழுந்து அதிமுக பிரமுகர், மனைவி கருகினர்

சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி […]

அன்னதானம்

அஸ்தினாபுரம் அருள்மிகு மகா சதுர் குன்று விநாயகர்- மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் (புற்று) ஆலயத்தில் ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்க இருக்கிறது. நேற்று மதியம் தொழிலதிபர் எம்.ஜெயபால், அஸ்தினாபுரம் லயன் சி.ஆர் மதுரை வீரன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன், சந்திரசேகரன், சி.ஆர்.மூர்த்தி, ஆர்.கே.பில்டர் உரிமையாளர் கண்ணன், ரூபிங் கோ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டை புருஷோத்தன் நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்