திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது குறித்து சிலை தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கையை சிலை தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது

ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

ராமேசுவரம் கோவில் குருக்கள், பணியாளர்கள் விவகாரம்: இந்து அறநிலையத்துறை மீது நீதிமன்றம் காட்டம்

ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம். இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.

அங்கோர் வாட் கோயில் – உலகின் 8வது அதிசயம்

அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலகின் எட்டாவது அதிசயமாக இது மாறியுள்ளது. அங்கோர் வாட் கோயில் உலகில் அதிகமான பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: மாலை அணிந்து விரதம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12ஆம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. இத்திருவிழாவில் வேடம் அணியும் பெரும்பாலான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். நேற்று முதல் 12ஆம் தேதி வரை 21 நாட்கள் வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர்.

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம்

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாந்தி யாகம் வளர்க்கப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 10 மணி வரை ‘சாந்தி யாகம்’ நடைபெறுகிறது. கோயிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் ‘சாந்தி யாகம்’ நடத்தி வருகின்றனர். இதில், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.