புகழ்பெற்ற திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா சுவாமி புறப்பாட்டின் போது வாணவெடி வெடிக்க தேவஸ்தானத்தில் பணம் இல்லையாம்

கடந்த மாத வருமானம் 2 கோடியாம் ,வெடிக்கு உபயதாரர் இல்லாததால் வெடி போடவில்லை என்று திருக்கோவில் இனை ஆணையர் தகவல் , அறநிலையத்துறை உண்டியல் பணத்தை கோவிலுக்கு கூட செலவு செய்யாதா ? முன்கூட்டியே நிர்வாகம் வாணவெடிக்கு உபயதாரர் தேவை என்று விளம்பரம் செய்திருந்தால் நூற்றுக்கணக்கில் வந்து இருப்பார்கள். இணை ஆணையர் கார்த்திக் ஏன் இதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை ?என திருச்செந்தூர் அணைத்து சமுதாய மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்
திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது .வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம் மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்பட்டன. பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

அதிகாலை 5.20 மணிக்கு ஆவணி திருவிழாவுக்கான கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் = 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர். வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 24 புதிய உறுப்பினர் நியமனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 24 புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான பரிசீலனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் […]
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 323 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

13.08.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 323 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சிட்லபாக்கம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மனோகரன் தாம்பரம் மாநகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 23 வது வட்ட […]
பத்மநாபா நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம்

குரோம்பேட்டை பத்மநாபா நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி (13-08-23) மதியம் சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல், அன்னதானம் நடைபெற உள்ளது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு கருமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி 2 நாட்கள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று சென்றார். இந்நிலையில், இன்று (ஆக. 11) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சதுரகிரி மலைக் கோயிலில் அன்னதானம் வழங்க உத்தரவு

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “பக்தர்களின் பங்களிப்புடன் கோயில் திருவிழா நடக்க வேண்டும். ஆகஸ்ட் 16ம் தேதி மட்டும் காலை 6 – மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
நெல்லையப்பர் திருக்கோவிலில் பக்தர்கள் தானமாக கொடுத்த பசுக்கள் மாயம் – இந்துமுன்னணி கண்டனம்

கா.குற்றாலநாதன்மாநிலச் செயலாளர்இந்து முன்னணி தென்னகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அவ்வப்போது பசுக்களையும் கன்றுகளையும் காளைகளையும் தானமாக வழங்கி கோசாலை அமைப்பதற்கு உபகரணங்கள் வழங்கி நெல்லையப்பர் திருக்கோவில் உள்தெப்பக்குளத்திற்கு வடக்கே கோசாலை இயங்கி வருகிறது. தினமும் காலை 6.30க்கு இங்கு கோபூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 10.8.2023 காலை தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை பிடியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் கோசாலையில் இருந்த சுமார் 13 பசுக்கள் , கன்றுகளை […]